

சென்னை,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 40 ஆண்டுக்கு பிறகு நடத்தும் வாய்ப்பை மெக்சிகோ பெற்றுள்ளது. அதுவும் இந்த முறை அந்த நாட்டிற்கு 13 ஆட்டங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் கால்பந்து தான் 'நம்பர் ஒன்' விளையாட்டு. அதனால் அந்த நாட்டு ரசிகர்கள் எந்த வகையிலாவது போட்டியை நேரில் பார்த்து விட வேண்டும் என ஏங்குகிறார்கள். ஆனால் தங்கள் அணிக்குரிய ஆட்டத்தை ஸ்டேடியத்தில் சென்று பார்க்க வேண்டும் என்றால் டிக்கெட் செலவு, உணவு, தங்குமிடம், போக்கு வரத்து செலவு இவற்றை எல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால் எப்படியும் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை செலவாகி விடுகிறது.
இதனால் பல ரசிகர்கள் வங்கியில் கடன் வாங்கி போட்டியை பார்க்கிறார்களாம். இது தொடர்பாக ஒரு நிறுவனம் அங்கு நடத்திய கருத்து கணிப்பில், 38 சதவீ தம் பேர் டெபிட் கார்டு அல்லது சேமித்து வைத்திருந்த பணத்தை போட் டிக்காக செலவிடுவதாகவும், மீதமுள்ள 62 சதவீதம் பேர் வங்கி தனிநபர் கடன், நிதிநிறுவனம் உள்ளிட்ட இதர வாய்ப்புகளை நாடுவதாகவும் கூறியுள்ளனர்.