நேஷன்ஸ் லீக் கால்பந்து: போர்ச்சுக்கல் அசத்தல் வெற்றி.. ரொனால்டோ கோல் அடித்து அபாரம்


நேஷன்ஸ் லீக் கால்பந்து: போர்ச்சுக்கல் அசத்தல் வெற்றி.. ரொனால்டோ கோல் அடித்து அபாரம்
x

image courtesy:twitter/@selecaoportugal

தினத்தந்தி 5 Jun 2025 12:01 PM IST (Updated: 5 Jun 2025 12:13 PM IST)
t-max-icont-min-icon

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதியில் போர்ச்சுக்கல் - ஜெர்மனி அணிகள் மோதின.

பெர்லின்,

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - ஜெர்மனி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனையடுத்து போர்ச்சுக்கல் வீரர் பிரான்சிஸ்கோ பதில் கோல் திருப்பி சமனுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர் ரொனால்டோ கோல் அடித்து அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். ஜெர்மனி தரப்பில் புளோரியன் விர்ட்ஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

முழு நேர ஆட்ட முடிவில் போர்ச்சுக்கல் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அல்லது பிரான்ஸ் அணியுடன் போர்ச்சுக்கல் மோதும்.

1 More update

Next Story