

நியூயார்க்,
உலகக் கோப்பை கால்பந்தில் 3-வது சுற்றில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை தோற்கடித்தது. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே வெற்றிக்குரிய கோலை அடித்தார். இந்த ஆட்டத்தின் போது இவ்விரு அணிகள் இடையே சீண்டல், உரசல்கள் தலைவிரித்தாடின. இதனால் கோபமடைந்த எம்பாப்பே ஆட்டம் முடிந்ததும், பரா குவே கோல் கிப்பர் ஒர்லாண்டோ கில்லுடன் கைகுலுக்க மறுத்தார். இதனால் அவரை வசைபாடிய பராகுவே பெண் எம்.பி. செலஸ்டே அமரில்லா, எம்பாப்பேவை, கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு உடனே பதிலடி கொடுத்த எம்பாப்பே, அமரில்லா இந்த பதவிக்கு தகுதியற்றவர் என கூறினார்.
இந்த நிலையில் எம்பாப்பேயை மீண்டும் அவமதித்துள்ள அமரில்லா, பராகுவே செனட்சபையில் மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். 'உலகமே வியக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்த ஒர்லாண்டே கில், ஒரு பராகுவே நாட்டினருக்கே உரிய பணிவுடன் கையை நீட்டினார். ஆனால் அவர் கைகுலுக்க மறுத்து அவர் முகத்திற்கு நேராக கத்தினார். இது பிரெஞ்சு பண்பாடு அல்ல. ஒரு உண்மையான பிரெஞ்சுக்காரர் ஒரு போதும் அப்படி செய்திருக்க மாட்டார்' என சாடியுள்ளார்.