பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் கோல் அடிக்க கூடாது என சடங்குகள் செய்த பெரு நாட்டு மத பயிற்சியாளர்கள்..!!

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் கோல் அடிக்க கூடாது என சடங்குகள் செய்த பெரு நாட்டு மத பயிற்சியாளர்கள்..!!
Published on

பிரேசிலியா,

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்துக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரேசில் வீரர் மார்கினோஸ் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.

இந்த ஆட்டத்திற்கு முன்னதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மத பயிற்சியாளர்கள் சடங்குகள் செய்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெரு மத பயிற்சியாளர்கள் தங்கள் நாட்டின் வெற்றிக்காக ஆசீர்வாதங்களைக் கோரி, சடங்குகள் செய்து பிரார்த்தனை செய்தனர். இதில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்டவர் என்பதால் அவர் கோல் அடிப்பதைத் தடுக்க தனித்துவமான சடங்குகளைச் செய்தனர். நெய்மார் படத்தின் மீது பழுப்பு நிற துணியை போர்த்தி, அவரது இடது காலை கட்டி, வலது காலின் மேல் ஒரு வாளை வைத்து வழிபாடு செய்தனர். 

எனினும்,பெருவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நெய்மார் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com