"இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்காக பிராத்திக்கிறேன்" - பரபரப்பை கிளப்பிய கால்பந்து வீரர்

இந்தியாவில் மனித உரிமைகளுக்கு என்ன நடக்கிறது என ஜெர்மனி வீரர் மெசுட் ஓஸில் கேள்வியெழுப்பியுள்ளார்.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

பெர்லின்,

ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் வீரர் மெசுட் ஓஸில். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெர்மனி கால்பந்து அணியில் நிறவெறி இருப்பதாகக் குற்றம்சாட்டி அந்த அணியை விட்டு இவர் விலகினார். அதுமட்மின்றி இவர் உக்ரைன் - ரஷியா போரினால் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்காகவும் தனது ஆதரவு குரலை எழுப்பியவர்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் குறித்து வெளிட்ட டுவிட்டர் பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இவர் நேற்று முன்தினம் லைலத் அல்-கதர் இரவு அன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், " இந்தியாவில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக லைலத் அல்-கத்ரின் புனித இரவில் பிரார்த்தனை செய்கிறேன். 

இந்த வெட்கக்கேடான சூழ்நிலைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று அழைக்கப்படும் நாட்டில் மனித உரிமைகளுக்கு என்ன நடக்கிறது என்று டுவீட் செய்துள்ளார்.

இவரின் இந்த பதிவுக்கு இணையத்தில் ஒருபக்கம் எதிர்ப்பும் மற்றொரு பக்கம் ஆதரவு குரலும் எழுந்துள்ளது. தைரியமாக உண்மையை பேசியதாக கூறி இவரை ஒருதரப்பினர் பாராட்டினாலும் இவரை பலரும் இணையத்தில் கண்டித்தும் வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com