

பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.இதில் இன்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டி - செல்சியா அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி 0-0 என சமநிலையில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மான்செஸ்டர் அணியில் 63வது நிமிடத்தில் அந்த அணியின் ரியாத் மஹ்ரேஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க செல்சியா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை . இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது,