

மாட்ரிட்,
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் அரையிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த லிவர்பூல் மொத்த கோல்களின் அடிப்படையில் (5-2) 10வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
இந்த தொடரில் நேற்று நடந்த அரை இறுதியின் 2வது சுற்றில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் மோதின.
ஆட்ட நேர முடிவில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் இருந்தது. இருப்பினும் அரை இறுதியின் முதல் சுற்றில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இருந்தது.
இதனால் அரை இறுதி சுற்று முடிவில் 5-5 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
பின்னர் 95வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கரிம் பென்சிமா கேல் அடிக்க இரு சுற்று ஆட்டங்களின் முடிவில் ரியல் மாட்ரிட் 6-5 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மே 29-ந் தேதி நடக்கும் இறுதி போட்டியில் லிவர்பூல் அணியுடன் ரியல் மாட்ரிட் அணி மோதுகிறது.