

நியூயார்க்,
உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன்-ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன.இந்த தொடருக்காக சர்வதேச அணிகள் தயாராகி வருகின்றன.
இந்த தொடருக்காக, போர்ச்சுகல் கால்பந்து அணி வருகிற 28-ந் தேதி மெக்சிகோவுடனும், 31-ந் தேதி அமெரிக்காவுடன் சர்வதேச நட்புறவு போட்டியில் ஆடுகிறது.
இந்த இரண்டு போட்டிக்கான போர்ச்சுகல் கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பெறவில்லை. தசைப்பிடிப்பு காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் உடல் தகுதியை எட் டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.