பலன் அளிக்காத ரொனால்டோவின் முயற்சி... போர்ச்சுகல்-காங்கோ ஆட்டம் டிரா

தொடக்கம் முதல் போர்ச்சுகல் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
பலன் அளிக்காத ரொனால்டோவின் முயற்சி... போர்ச்சுகல்-காங்கோ ஆட்டம் டிரா
Published on

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும், 3-வது இடத்தில் இருக்கும் சிறந்த 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில், ஹூஸ்டனில் இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணிக்கு நடைபெற்ற 'கே' பிரிவு லீக் ஆட்டத்தில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் காங்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதல் போர்ச்சுகல் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

போர்ச்சுகல் அணியின் ஜோவா நோவஷ் ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காங்கோ அணியின் யோனே வைஸா 45வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியில் இரு அணிகளும் போராடியும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-1 என இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோவின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com