படுதோல்வியடைந்த சாண்டோஸ் அணி: தேம்பி தேம்பி அழுத நெய்மர் - வீடியோ

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வாஸ்கோ டா காமா மற்றும் சாண்டோஸ் அணிகள் மோதின.
Image Courtesy: X (Twitter) / File Image
Image Courtesy: X (Twitter) / File Image
Published on

ரியோ,

பிரேசிலிய சீரி ஏ கால்பந்து தொடரில் சாண்டோஸ் அணிக்காக நெய்மர் விளையாடி வருகிறார். இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வாஸ்கோ டா காமா மற்றும் சாண்டோஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சாண்டோஸ் 0-6 என்ற கணக்கில் வாஸ்கோ டா காமாவிடம் தோல்வியடைந்தது. இது நெய்மரின் தொழில்முறை வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியாகும்.

சமீபத்தில் காயம் காரணமாக பார்மை இழந்து தவித்துவரும் நெய்மர், சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் சூழ்ந்திருந்தனர். ஆனால் சாண்டோஸ் அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் தோல்வியடைந்தது. எதிர்ப்பார்ப்புடன் மைதானத்திற்கு வந்த பல ரசிகர்கள் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில் படுதோல்வியடைந்தால் மைதானத்திலேயே அமர்ந்து நெய்மர் கதறி அழுதார். அவரை சகவீரர்களும், பயிற்சியாளரும் சமாதனம் செய்தபோதும் டக்அவுட்டுக்கு செல்லும் வழியில் அழுதபடியே வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இத்தொடர் முழுக்க மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாண்டோஸ் அணி 19 ஆட்டங்களில் 10 தோல்விகளை சந்தித்து பட்டியலில் 15-வது இடத்தில் நீடிக்கிறது. இந்த சூழலில் அணியின் தோல்விக்காக சாண்டோஸ் அணியின் பயிற்சியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com