தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் - சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் ..! பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஆட்ட நேர முடிவில் 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
Image Courtesy : Indian Football Team Twitter 
Image Courtesy : Indian Football Team Twitter 
Published on

பெங்களூரு,

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர்பெங்களூருவில் இன்று தொடங்கியது . இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகள் உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது.

ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 16 வது நிமிடம் மற்றும் 74வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுனில் சேத்ரி கோல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும் .

தொடர்ந்து 81 வது நிமிடத்தில் இந்திய அணியின் உதாண்டா சிங் கோல் அடித்தார். பதில் கோல் அடிக்க பாகிஸ்தான் அணி போராடி முடியவில்லை.

ஆட்ட நேர முடிவில் 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com