தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல்


தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப்:  பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல்
x

image courtesy: twitter/@IndianFootball

தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது.

கொழும்பு,

7 அணிகள் இடையிலான தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் (17 வயதுக்குட்பட்டோர்) போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நடந்த கடைசி லீக்கில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை சுவைத்தது. இந்திய அணியில் தல்லுமுவான் காங்தே, வாங்கேரக்பம், ரேஹன் அகமது ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

1 More update

Next Story