தெற்காசிய ஜூனியர் கால்பந்து: இந்திய அணி சாம்பியன்

image courtesy:twitter/@IndianFootball
இறுதிப்போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின.
கொழும்பு,
10-வது தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் (17 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வந்தது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.
இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்து 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
INDIA are SAFF U17 for the 7⃣th time! #U17SAFF2025 #IndianFootball ⚽️ pic.twitter.com/mg9gxhBfZI
— Indian Football Team (@IndianFootball) September 27, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





