மாநில கால்பந்து போட்டி

மாநில கால்பந்து போட்டி தொடங்கியது
மாநில கால்பந்து போட்டி
Published on

விக்கிரமசிங்கபுரம்:

சிவந்திபுரத்தில் நாடார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 85-வது ஆண்டு மாநில அளவிலான சீனியர் கால்பந்து போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 18 அணிகள் பங்கேற்றுள்ளன. இறுதிப்போட்டி வருகிற 17-ந் தேதி நடக்கிறது. ஒரு போட்டியில் ஆறுமுகம்பட்டி என்.ஒய்.எப்.எப்.சி. அணியும், ஆலங்குளம் அசுரா அணியும் விளையாடியது. இதில் ஆறுமுகம்பட்டி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியை அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தொடங்கி வைத்தார்.

இதில் சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேந்திரன், இளையபெருமாள், முன்னாள் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சவுந்தர்ராஜன், தொழிலதிபர் மார்ட்டின், விளையாட்டு ஆலோசகர் மனோகரன் சாமுவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். போட்டிகளை நாடார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகளான தலைவர் திரவியகனி, செயலாளர் ஜெயராமன், பொருளாளர் மகேஷ் ஆகியோர் நடத்துகின்றனர். கிரிக்கெட் மூர்த்தி வர்ணனை செய்தார்.

இளையோருக்கான இறுதி போட்டியில் முதலியார்பட்டி ஜெயராம் புட்பால் அணியும், ஆறுமுகம்பட்டி என்.ஒய்.எப்.எப்.சி. அணியும் விளையாடியது. இதில் ஜெயராம் அணி வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com