மீண்டும் சர்வதேச கால்பந்து போட்டியில் களமிறங்கும் சுனில் சேத்ரி.. ரசிகர்கள் மகிழ்ச்சி


மீண்டும் சர்வதேச கால்பந்து போட்டியில் களமிறங்கும் சுனில் சேத்ரி.. ரசிகர்கள் மகிழ்ச்சி
x

image courtesy:twitter/@IndianFootball

சுனில் சேத்ரி கடந்த ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

புதுடெல்லி,

2027-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான தகுதி சுற்றின் 3-வது ரவுண்டு ஆட்டம் இந்த மாதம் இறுதியில் நடக்கிறது. இதில் இந்திய அணி வங்காளதேசம், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய அணிகளுடன் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் வருகிற 25-ந் தேதி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் சேத்ரி, அந்த முடிவை மாற்றி இந்த தொடரின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொல்கத்தாவில் நடந்த உலகக்கோப்பை தகுதி சுற்றில் குவைத்துக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இருப்பினும் 40 வயதான சுனில் சேத்ரி ஐ.எஸ்.எல். தொடரில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு மீண்டும் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இதனை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதனால் இந்திய கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

1 More update

Next Story