16 ஆண்டுகளுக்குப் பிறகு... ’பிபா’ உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற வட கொரியா

தைவான் அணி 0-4 என்ற கணக்கில் வட கொரிய அணியிடம் தோல்வி அடைந்தது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு... ’பிபா’ உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற வட கொரியா
Published on

மெல்போர்ன்,

21-வது மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், தைவான் அணி 0-4 என்ற கணக்கில் வட கொரிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, 16 ஆண்டுகளுக்குப் பிறகு வட கொரிய மகளிர் அணி 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

வடகொரியாவின் ஹொங் சாங்-ஒக் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியார். அவர் 32, 49 மற்றும் 68வது நிமிடங்களில் கோல்கள் அடித்தார். மேலும் கிம் க்யோங்-யோங் 52வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

Also Read
ரொனால்டோவுக்கு அடுத்து... 900 கோல் கிளப்பில் மெஸ்சி - ரசிகர்கள் கொண்டாட்டம்!
16 ஆண்டுகளுக்குப் பிறகு... ’பிபா’ உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற வட கொரியா

1991ஆம் ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பையில் காலிறுதிவரை சென்ற தைவான் அணி, அதன் பிறகு எந்த சீசனிலும் தகுதி பெறவில்லை. தற்போது, நவம்பரில் நடைபெற உள்ள இடைக்கண்ட பிளேஆப் போட்டிகள் மூலம் உலகக் கோப்பைக்கு தகுதி பெற தைவான் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com