மெஸ்ஸி, நெய்மார் இல்லாததால் தடுமாறும் பிஎஸ்ஜி அணி..! எம்பாப்பே 2 கோல் அடித்தும் நைஸ் அணியிடம் தோல்வி..!

முதன்மை கால்பந்து தொடரான லீக்-1 பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
Image Credits : ANI News
Image Credits : ANI News
Published on

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டில் முதன்மை கால்பந்து தொடரான லீக்-1 நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி அணியாக திகழும் பிஎஸ்ஜி அணியில் இருந்து முன்னணி வீரர்கள் மெஸ்ஸி, நெய்மார் வெளியேறினர். இந்த நிலையில் நட்சத்திர வீரர் எம்பாப்பே இந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணி நைஸ் அணியுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் நைஸ் அணியிடம் பிஎஸ்ஜி அணி தோல்வியை தழுவியது.

ஆட்டம் தொடங்கிய 21-வது நிமிடத்தில் நைஸ் அணியின் சார்பாக டெரெம் மொப்பி முதல் கோல் அடித்தார். அதன் பின்பு 29-வது நிமிடத்தில் எம்பாப்பே பிஎஸ்ஜி அணிக்காக பதில் கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தன.

ஆட்டத்தின் 2-வது பாதியில் நைஸ் வீரர்கள் அபாரமாக விளையாடினர். 53-வது நிமிடத்தில் கயேடன் லபோர்டேவும், 68-வது நிமிடத்தில் மொப்பியும் தலா ஒரு கோல் அடித்ததன் மூலம் 3-1 என்ற கணக்கில் நைஸ் அணி முன்னிலை பெற்றது.

பின்னர் 87-வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு எவ்வளவோ முயற்சித்தும் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக பிஎஸ்ஜி அணி 2-3 என்ற கோல் கணக்கில் நைஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியால் லீக்-1 புள்ளி பட்டியலில் பிஎஸ்ஜி அணி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மொனாக்கோ முதல் இடத்திலும், நைஸ் அணி 2-வது இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com