இங்கிலாந்து கால்பந்து முன்னாள் கேப்டன் ரூனி வாகனம் ஓட்ட 2 ஆண்டு தடை

இங்கிலாந்து கால்பந்து முன்னாள் கேப்டன் ரூனி வாகனம் ஓட்ட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கால்பந்து முன்னாள் கேப்டன் ரூனி வாகனம் ஓட்ட 2 ஆண்டு தடை
Published on

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான வெய்ன் ரூனி கடந்த 1ந் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மான்செஸ்டரில் உள்ள ஸ்டாக்போர்ட் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான வெய்ன் ரூனி தனது தவறை ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து அவருக்கு வாகனம் ஓட்ட 2 ஆண்டுகள் தடை விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அத்துடன் அடுத்த 12 மாதங்களுக்குள் அவர் 100 மணி நேரம் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய எனது தவறான முடிவுக்காக வெளிப்படையாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இது முற்றிலும் தவறானதாகும் என்று வெய்ன் ரூனி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com