முழு திறனையையும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை: பிரான்ஸ் பயிற்சியாளர்

ஸ்பெயின் அணி 2-0 என பிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முழு திறனையையும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை: பிரான்ஸ் பயிற்சியாளர்
Published on

வாஷிங்டன்,

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் பரபரப்பான இறுதி கட்டத்திற்கு சென்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி போட்டி ஒன்றில், ஸ்பெயின் அணி 2-0 என பிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தோல்விக்கு பிறகு பிரான்ஸ் அணியின் பயிற்சி யாளர் டிடியர் டெசாம்ஸ் கூறுகையில், 'ஸ்பெயின் அணியின் தற்காப்பு ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. இதனால் அவர்களுடைய கோல் எல்லைக்குள் நுழைவதற்கு சிறிய இடைவெளி கிடைப்பதே பெரிய விஷயமாக தெரிந்தது. அத்துடன் நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக தவறுகள் இழைத்ததால் அவர்களுக்கு நெருக்கடியை உருவாக்குவது கடினமாகி விட்டது. எங்களது தொழில்நுட்ப தரம் முந்தைய ஆட்டங்களில் வெளிப்படுத்தியதை விட குறைவாக இருந்தது. பந்தை கடத்துவதிலும், ஆட்டத்தின் போக்கை கணிப் பதிலும், பாஸ்களை இடைமறித்து பந்தை பறிப்பதிலும் அவர்கள் எங்களை விட சிறந்து விளங்குகிறார்கள். அதற்கு எங்களால் தீர்வு காண முடியவில்லை. இது போன்ற பெரிய போட்டியில் ஸ்பெயின் போன்ற அணிக்கு எதிராக நீங்கள் உங்களுடைய முழு திறனையையும் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அந்த மாதிரியான தரத்தை நாங்கள் இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தவில்லை' என்றார். இந்த உலகக் கோப்பையுடன் டெசாம்ஸ் சின் 14 ஆண்டு கால பயிற்சியாளர் பணி முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com