

வாஷிங்டன்,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.
உலகக்கோப்பை தொடரில் இன்று மற்றும் நாளை நடைபெறும் ஆட்டங்கள் குறித்து பார்க்கலாம்:
இடம்: நியூஜெர்சி, நேரம்: நள்ளிரவு 12.30 மணி.
இடம்: போஸ்டன். நேரம்: அதிகாலை 3.30 மணி.
இடம்: கான்சாஸ் சிட்டி, நேரம்: காலை 6.30 மணி.
இடம்: சான்பிரான்சிஸ்கோ, நேரம்: காலை 9.30 மணி.
இடம்: ஹூஸ்டன், நேரம்: இரவு 10.30 மணி.
கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோர் நாளை விளையாட உள்ளனர். தொடக்க ஆட்டத்தில் அபாரமாக விளையாடி மெஸ்ஸியின் அர்ஜென்டினா, ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி வெற்றியுடன் தொடங்குமா என எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.