பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா 5-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து கால்இறுதியை எட்டியது.
பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
Published on

பதும் தானி,

12-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பெறும் சிறந்த இரு அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா நேற்று தனது 2-வது லீக்கில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 5-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து கால்இறுதியை எட்டியது. அந்த அணியில் ஸ்கை ஹால்மாரிக்ஸ் (38, 39 மற்றும் 48-வது நிமிடம்), டேனிலா புருட்டஸ் (54-வது நிமிடம்), டெய்சி பிரவுன் (90-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். முதல் ஆட்டத் தில் ஜப்பானிடம் 0-6 என்ற கணக்கில் தோற்ற இந்திய அணி கடைசி லீக்கில் வருகிற 8-ந்தேதி சீனதைபேயை சந்திக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com