உலகக்கோப்பை கால்பந்து 2018: முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி முன்னிலை

உலகக்கோப்பை கால்பந்து குரோஷியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. #FIFAWorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து 2018: முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி முன்னிலை
Published on

மாஸ்கோ,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில் இன்று தொடங்கிய இறுதிஆட்டத்தின் துவக்கம் முதலே பதற்றம் தொற்றிக் கொண்டது. இதில் ஆட்டம் தொடங்கிய 18 வது நிமிடத்திலே குரோஷியா அணி வீரர் மரியோ மான்ட்ஜூகிச் அடித்த சுய கோலால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் 1 கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

இதனைத்தொடர்ந்து பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் 1 கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com