

வான்கூவர்,
கனடா அணி வீரர் இஸ்மாயில் கொனேவுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, குரூப்-பி பிரிவில் இடம்பெற்றுள்ள கனடா மற்றும் கத்தார் அணிகள் வான்கூவரில் இன்று மோதின. இதில் கனடா அணி 6-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் 50-வது நிமிடத்தில் கனடா அணி வீரர் இஸ்மாயில் கொனே பந்தை கடத்திச்சென்றார். அப்போது கத்தார் அணி வீரர் அஸ்ஸின் மபிதோ, அவரிடமிருந்து பந்தை பறிக்கும் நோக்கில் ஆக்ரோஷமாக செயல்பட்டார். இந்த மோதலில் கீழே விழுந்த இஸ்மாயில் கொனேவுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சக வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்ரோசமாக செயல்பட்ட கத்தார் வீரர் அஸ்லின் மபிதோவுக்கு நடுவர் ரெட் கார்டு வழங்கினார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.