

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் க்ரூப் இ பிரிவில் இடம்பெற்றுள்ள குராசோ மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகள் இடையிலான ஆட்டம் பிலாடெல்பியா மைதானத்தில் நடந்தது.
தொடக்கம் முதலே பரபரப்பாக அமைந்த ஆட்டத்தின் 7-ஆவது நிமிடத்திலேயே ஐவரி கோஸ்ட் தனது கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் யான் டியோமான்டெ ஏற்படுத்திக் கொடுத்த அசிஸ்ட்-இல் நிகோலஸ் பெபெ அபார கோல் அடித்து அசத்தினார். இதனால் அந்த அணி 0-1 கமக்கில் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதி வரை ஐவரி கோஸ்ட் அணி 0-1 கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 64-ஆவது நிமிடத்தில் இப்ராகிம் சங்காரே ஏற்படுத்திய அசிஸ்ட்-ஐ நிகோலஸ் பெபெ கோலாக மாற்றினார். இதனால், அந்த அணி 0-2 கணக்கில் வலுவான நிலையை எட்டியது.
ஆட்டத்தின் இறுதிவரை குரசோ அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், ஐவரி கோஸ்ட் அணி 0-2 கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக ஐவரி கோஸ்ட் அணி உலகக் கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.