உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அறிவிப்பு

மெஸ்ஸி இப்போதும் அந்த அணியில் முக்கிய மான வீரராக திகழ்கிறார்.
உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அறிவிப்பு
Published on

பியூனஸ் அயர்ஸ்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வருகிற 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா 'ஜெ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர் டான் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். அர்ஜென்டினா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 16-ந்தேதி அல்ஜீரியாவை சந் திக்கிறது.

இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கான 26 பேர் கொண்ட அர்ஜென்டினா அணியை தலைமை பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி நேற்று அறிவித்தார். கேப்டனாக 38 வயதான லயோனல் மெஸ்சி தொடருகிறார்.

2022-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 7 கோல்கள் அடித்தும், 3 கோல்கள் அடிப்ப தற்கும் உதவியாக இருந்த மெஸ்ஸி இப்போதும் அந்த அணியில் முக்கிய மான வீரராக திகழ்கிறார்.

அர்ஜென்டினா அணி:

கோல்கீப்பர்கள்: எமிலியானோ மார்டினெஸ், ஜெரோனிமோ ருல்லி, ஜுவான் முஸ்ஸோ.

பின்களம் : கோன்சாலோ மான்டியேல், நஹுவேல் மோலினா, லிசாண்ட்ரோ மார்டினெஸ், நிக்கோலஸ் ஒடமெண்டி, லியோனார்டோ பலேர்டி, கிறிஸ்டியன் ரொமேரோ, நிக்கோலஸ் டாக்லியாபிகோ, பகுண்டோ மெடினா.

நடுகளம் : ஜியோவானி லோ செல்சோ, லியாண்ட்ரோ பரேடெஸ், ரோட்ரிகோ டி பால், எக்ஸிகுயல் பலாசியோஸ், என்ஸோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மெக்அலிஸ்டர், வாலன்டின் பார்கோ.

முன்கள வீரர்கள்: லியோனல் மெஸ்ஸி , நிக்கோலஸ் கோன்சாலஸ், கியுலியானோ சிமியோன், லாட்டாரோ மார்டினெஸ், ஜோஸ் மானுவல் லோபஸ், ஜூலியன் அல்வாரெஸ், தியாகோ அல்மடா, நிகோ பாஸ்.

X

Daily Thanthi
www.dailythanthi.com