

ரஷ்யா,
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவு ஆட்டத்தில் ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின.
இதில் கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, ஆசிய அணியான ஈரானை எதிர்கொண்டது. 2வது சுற்றை உறுதி செய்ய இந்த மோதலில் போர்ச்சுகல் டிரா செய்தால் போதுமானது. அதே சமயம் 3 புள்ளிகளுடன் அடுத்த சுற்று கனவு நனவாக இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே சாத்தியமாகும் என்ற சூழலில் களம் இறங்கியது ஈரான் அணி.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் கோலை போர்ச்சுகல் அணியின் சார்பில் ரிகார்டோ பதிவு செய்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 1 கோல் அடித்து முன்னிலை பெற்றிருந்தது. அடுத்து நடந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஈரான் அணியின் சார்பில் கரீம் 1 கோல் அடித்தார். இதன் மூலம் ஈரான், போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.