உலகக்கோப்பை கால்பந்து தொடர்: 'ஐ' பிரிவு பட்டியலில் முதல் இடம் பிடித்த பிரான்ஸ்

பிரான்ஸ் அணி, கூடுதல் கோல் வித்தியாசத்துடன் இந்த புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
பிரான்ஸ், உலகக்கோப்பை கால்பந்து தொடர்
Published on

நியூயார்க்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில் 'ஐ' பிரிவு பட்டியலில் பிரான்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.

'ஐ' பிரிவு

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடுகின்றன. அவை ஏ முதல் கே வரை 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒரு பிரிவில் தலா 4 அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் தற்போது லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

பிரான்ஸ் அணி

இதில், இன்று ஐ பிரிவில் 2 ஆட்டங்கள் நடந்தன. பிலடெல்பியா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 2.30 மணிக்கு நடைபெற்ற 'ஐ' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில், பிரான்ஸ் மற்றும் ஈராக் அணிகள் விளையாடின. இந்த போட்டியில், ஈராக் அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி பெற்றது.

இதேபோன்று, நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு 'ஐ' பிரிவு லீக் ஆட்டத்தில் நார்வே மற்றும் செனகல் அணிகள் விளையாடின. இதில், ஈராக் அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி நார்வே வெற்றி பெற்றது.

கூடுதல் கோல் வித்தியாசம்

இதனால், ஐ பிரிவு பட்டியலில், பிரான்ஸ் அணி (6 புள்ளிகள்) 2 போட்டிகளில் விளையாடி அவற்றில் வெற்றி பெற்று உள்ளது. நார்வே அணியும் (6 புள்ளிகள்) 2 போட்டிகளில் விளையாடி அவற்றில் வெற்றி பெற்று உள்ளது.

எனினும், பிரான்ஸ் அணி, கூடுதல் கோல் வித்தியாசத்துடன் இந்த புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நார்வே அணி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. செனகல் அணி 3-ம் இடத்திலும், ஈராக் அணி 4-ம் இடத்திலும் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com