உலகக்கோப்பை கால்பந்து; ஆஸ்திரியாவை வீழ்த்திய ஸ்பெயின்

பெட்ரோ பொர்ரோ 66-வது நிமிடத்தில் ஒரு கோலும், 89-வது நிமிடத்தில் மிகெல் மற்றொரு கோலையும் போட்டனர்.
உலகக்கோப்பை கால்பந்து; ஆஸ்திரியாவை வீழ்த்திய ஸ்பெயின்
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா அணியை, ஸ்பெயின் வீழ்த்தி வெளியேற்றியது.

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா அணிகள் விளையாடின.

ஸ்பெயின் முன்னிலை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 36-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்பட்டது. ஸ்பெயின் அணியின் வீரர் மிகெல் ஒயார்ஜபால் முதல் கோலை போட்டார்.

எனினும், அதன்பின்னர் இரு அணிகளின் தரப்பிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-1 என ஸ்பெயின் முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் எந்த அணிக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்படவில்லை.

ஆஸ்திரியா வெளியேற்றம்

2-வது பாதி விறுவிறுப்புடன் சென்றது. பெட்ரோ பொர்ரோ 66-வது நிமிடத்தில் ஒரு கோலும், 89-வது நிமிடத்தில் மிகெல் மற்றொரு கோலையும் போட்டு ஸ்பெயின் அணியை 3-0 என முன்னிலைக்கு கொண்டு சென்றனர்.

ஆஸ்திரியா தரப்பில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா அணியை, ஸ்பெயின் வீழ்த்தி வெளியேற்றியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com