

ரஷியா,
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது.
முதல் லீக் ஆட்டத்தில் தென் கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
இரண்டாவது லீக் ஆட்டத்தில் சுவீடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது.
மூன்றாவது லீக் ஆட்டத்தில் செர்பியா அணியை 0-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது.
இ பிரிவில் 4 புள்ளிகளுடன் உள்ள அணியான சுவிட்சர்லாந்து தங்களது இறுதி லீக்கில் கோஸ்டாரிகா அணியுடன் மோதியது. 2 தோல்விகளை சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட கோஸ்டாரிகா அணியை வென்று, அடுத்த சுற்றுக்கு நுழையும் முனைப்புடன் சுவிட்சர்லாந்து அணி களமிறங்கியது.
ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் சுவிட்சர்லாந்து அணியின் சார்பில் பிலிரிம் தனது முதல் கோலை பதிவு செய்தார். இதற்கு கோஸ்டாரிகா அணி வீரர்கள் பதில் கோல் அடிக்க திணறினர். இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி முன்னிலைபெற்றிருந்தது.
அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் கோஸ்டாரிகா அணி வீரர் கெண்டால் வாஸ்டன் 1 கோல் அடித்து ஆட்டத்தினை சமன் செய்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி வீரர் ஜோசிப் 1 கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி முன்னிலைபெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் கோஸ்டாரிகா அணி வீரர் சோமர் 1 கோல் அடித்தார். இதன் மூலம் கோஸ்டாரிகா, சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது