உலகக்கோப்பை கால்பந்து: துனிசியா தகுதி பெற்று அசத்தல்


உலகக்கோப்பை கால்பந்து: துனிசியா தகுதி பெற்று அசத்தல்
x

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு துனிசியா தகுதி பெறுவது இது 7-வது முறையாகும்.

மலாபோ,

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடக்கிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து திருவிழாவுக்கு போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும்.

உலகக் கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று போட்டியில் கலந்து கொண்டுள்ள 53 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும்.

இதில் துனிசியா தலைநகர் மலாபோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘எச்’ பிரிவு ஆட்டம் ஒன்றில் துனிசியா - ஈக்வடாரியல் கினி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்திய ஆட்டத்தில் துனிசியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈக்வடாரியல் கினியை வீழ்த்தியது. 8-வது ஆட்டத்தில் ஆடிய துனிசியா 7 வெற்றி, ஒரு டிராவுடன் 22 புள்ளிகள் குவித்து தனது பிரிவில் முதலிடத்தை உறுதி செய்ததுடன் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று அசத்தியது. அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.

துனிசியா தொடர்ச்சியாக 3-வது முறையாகவும், ஒட்டுமொத்தத்தில் 7-வது தடவையாகவும் உலகக் கோப்பை போட்டிக்குள் கால்பதிக்கிறது.

1 More update

Next Story