உலக கோப்பை கால்பந்து: உருகுவே-கேப் வெர்டே போட்டி டிரா

போட்டியின் 21-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணிக்காக, கெவின் பினா முதல் கோலை போட்டார்.

உலக கோப்பை கால்பந்து:  உருகுவே-கேப் வெர்டே போட்டி டிரா
Published on

மியாமி

உலக கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே மற்றும் கேப் வெர்டே விளையாடிய போட்டி டிரா ஆனது.

23-வது உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் மியாமி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 3.30 மணிக்கு நடைபெற்ற 'எச்' பிரிவு லீக் ஆட்டத்தில் உருகுவே மற்றும் கேப் வெர்டே அணிகள் விளையாடின.

21-வது நிமிடம்

இதில், போட்டியின் 21-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணிக்காக, கெவின் பினா முதல் கோலை போட்டார். இதனால், 1-0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து, முதல் பாதியின் இறுதி வரை கோல் அடிக்க இரு அணிகளும் முயன்றன. இதில், உருகுவே அணியின் மேக்சிமிலியானோ அராஜோ 44-வது நிமிடத்தில் கோல் அடித்ததும், 1-1 என்ற புள்ளி கணக்கில் போட்டி சமநிலையில் இருந்தது.

போட்டி டிரா

இதன்பின்னர், உருகுவே அணியின் அகஸ்டின் கேனோபியோ இரண்டாம் பாதியின் 6-வது நிமிடத்தில் கோல் அடித்து 2-1 என்ற புள்ளி கணக்கில் அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதனால் போட்டி விறுவிறுப்பு அடைந்தது. போட்டியின் 61-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணிக்காக ஹீலியோ வரேலா கோல் போட்டார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தன.

ஆட்டத்தில் யாருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை. ஆனால், இரு அணிகளுக்கும் தலா இரு முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதன்பின்னர், போட்டி இறுதி வரை எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், போட்டி டிரா ஆனது. எச் பிரிவில் புள்ளி பட்டியலில், ஒரு டிரா என ஸ்பெயின் அணி முதல் இடத்தில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com