உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில்-அர்ஜென்டினா ஆட்டம் ரத்து

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில்-அர்ஜென்டினா ஆட்டம் ரத்து.
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில்-அர்ஜென்டினா ஆட்டம் ரத்து
Published on

சாபாலோ,

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் அடுத்த ஆண்டு (2022) நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கிறது. இதன் தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சாபாலோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்அமெரிக்க கண்ட அணிகளுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் கைவிடப்பட்டது. அர்ஜென்டினா அணியில் இடம் பிடித்து இருந்த 4 வீரர்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்காமல் களம் இறங்கியது தெரியவந்ததை அடுத்து பிரேசில் நாட்டு சுகாதார அதிகாரிகள் போட்டி நடைபெறும் இடத்துக்கு நேரில் வந்து போட்டியை நடத்தும் அமைப்பு குழுவினருடன் கலந்து பேசி போட்டியை அதிரடியாக நிறுத்தினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிரேசில் சுகாதார அதிகாரிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் இந்த போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இந்த போட்டி மீண்டும் எப்பொழுது நடைபெறும் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. நடந்த சம்பவத்துக்கு அதிருப்தி தெரிவித்து இருக்கும் உலக கால்பந்து சம்மேளனம் (பிபா) போட்டி அதிகாரிகள் அறிக்கையை ஆய்வு செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com