உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா-கத்தார் அணிகள் இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டி இந்தியா-கத்தார் அணிகள் இன்று மோதுகிறது.
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா-கத்தார் அணிகள் இன்று மோதல்
Published on

தோகா,

2022-ம் ஆண்டுக்கான உலக கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இந்திய அணி இ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் அங்கம் வகிக்கின்றன. உலக கோப்பை போட்டிக்கான தகுதி வாய்ப்பை இழந்து விட்ட இந்திய அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆசிய சாம்பியனான கத்தார் அணி முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் எஞ்சிய தகுதி சுற்று ஆட்டங்கள் கத்தார் தலைநகர் தோகாவில் இன்று தொடங்கி நடக்கிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-கத்தார் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வலுவான கத்தார் அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி கோலின்றி டிரா கண்டு இருந்தது. அந்த நம்பிக்கையுடன் இந்திய அணி கத்தாரை எதிர்கொள்ளும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலான இடைவெளிக்கு பிறகு இந்திய அணி களம் காணுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com