

புதுடெல்லி
மத்திய விளையாட்டு அமைச்சகம் 2025-ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்துள்ளது.
கேல் ரத்னா விருதுக்கு ஆக்கி வீரர் ஹர்திக் சிங் பெயர் பரிசீலிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுக்குழுவின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்த பிறகு, எந்த வீரருக்கும் கேல் ரத்னா வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு, உலக சாம்பியன் செஸ் வீரர் டி. குகேஷ், ஆக்கி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகிய 4 பேருக்கு கேல் ரத்னா வழங்கப்பட்டது.
2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 12 ஆண்டுகளில் 'கேல் ரத்னா' விருது யாருக்கும் வழங்கப்படாதது இதுவே முதல் முறையாகும்.
தேஜஸ்வின் சங்கர் - தடகளம்
பிரியங்கா கோஸ்வாமி - தடகளம்
நரேந்தர் - குத்துச்சண்டை
விதித் குஜராத்தி - செஸ்
திவ்யா தேஷ்முக் - செஸ்
தனுஷ் ஸ்ரீகாந்த் - காதுகேளாதோர் துப்பாக்கிச் சுடுதல்
ராஜ்குமார் பால் - ஹாக்கி
சுர்ஜீத் - கபடி
ருத்ரான்ஷ் கண்டேல்வால் - பாரா துப்பாக்கிச் சுடுதல்
ஏக்தா பயான் - பாரா தடகளம்
அரவிந்த் சிங் - ரோயிங்
அகில் ஷியோரன் - துப்பாக்கிச் சுடுதல்
ட்ரீசா ஜாலி - பேட்மிண்டன்
காயத்ரி கோபிசந்த் - பேட்மிண்டன்
லால்ரெம்சியாமி - ஹாக்கி
முகமது அஜ்மல் - தடகளம்
பூஜா - கபடி
ஸ்ரீ ஐ அருமைநாயகம் (கால்பந்து)
பர்வீர் சிங் - தடகளம்
சோட்டே லால் யாதவ் - குத்துச்சண்டை
நேஹா நந்த்குமார் சவான் – துப்பாக்கிச் சுடுதல்
தர்மேந்திர சிங் யாதவ் - குத்துச்சண்டை
வீரேந்திர குமார் - மல்யுத்தம்