அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி வெற்றி

அகில இந்திய ஆக்கி போட்டியில், ரெயில்வே அணி வெற்றிபெற்றது.
அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி வெற்றி
Published on

சென்னை,

93-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ரெயில்வே அணி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது. ரெயில்வே அணியில் பர்மீத், அய்யப்பா, ஹர்சாஹிப் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். தமிழக அணியில் மாரீஸ்வரன், ஜோஷ்வா கோல் போட்டனர். மற்றொரு ஆட்டத்தில் இந்திய விமானப்படை அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை சாய்த்தது. சுக்தேவ் சிங் 59-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். மத்திய தலைமை செயலகம்-இந்திய கடற்படை அணிகள் மோதிய இன்னொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய விமானப்படை-பஞ்சாப் நேஷனல் வங்கி (பிற்பகல் 2.30 மணி), ரெயில்வே-பஞ்சாப் சிந்து வங்கி (மாலை 4.15 மணி), ராணுவம்-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com