அகில இந்திய ஆக்கி: அரைஇறுதியில் ரெயில்வே-கடற்படை

இந்திய கடற்படை அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியா ஜூனியர் அணியை தோற்கடித்தது.

அகில இந்திய ஆக்கி: அரைஇறுதியில் ரெயில்வே-கடற்படை
Published on: 

சென்னை,

எம்.சி.சி. முருகப்பா தங்கக் கோப்பைக்கான 97-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. நேற்று கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியன் ரெயில்வே- பஞ்சாப் நேஷனல் இடையிலான மோதல் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியா ஜூனியர் அணியை தோற்கடித்தது.

லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே (10 புள்ளி) முதலிடமும், இந்திய ராணுவம் (5 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. கர்நாடகா, இந்தியன் ஆயில், பஞ்சாப் நேஷனல் வங்கி (தலா 3 புள்ளி) அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்தன. 'பி' பிரிவில் பாரத் பெட்ரோலியம் (10 புள்ளி) முதலிடமும், இந்திய கடற்படை (8 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன. தமிழ்நாடு (5 புள்ளி), மலேசியா (3 புள்ளி), சாய் (1 புள்ளி) அணிகள் அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தன.

போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே - இந் திய கடற்படை (மாலை 4 மணி), பாரத் பெட்ரோலியம்- இந்திய ராணுவம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

X