ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
Image Courtesy : @TheHockeyIndia twitter
Image Courtesy : @TheHockeyIndia twitter
Published on

சென்னை,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரைஇறுதிச் சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, 19-வது இடத்தில் உள்ள ஜப்பானை சந்தித்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் செல்வம் கார்த்தி 51-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

முன்னதாக இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென்கொரியா அணியுடன், மலேசியா அணி மோதியது. இதில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசியா அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com