‘பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது’ - முன்னாள் கேப்டன் வேண்டுகோள்

பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முன்னாள் கேப்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது’ - முன்னாள் கேப்டன் வேண்டுகோள்
Published on

புதுடெல்லி,

இந்திய ஆக்கி அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கியவரும், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் 3 முறை அங்கம் வகித்தவருமான பல்பீர் சிங் சீனியர் (வயது 95) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இந்திய ஆக்கி அணிக்கு அளப்பரிய பங்களிப்பை அளித்த பல்பீர்சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று 1975-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணியின் கேப்டன் அஜித் பால் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், தயான் சந்த், பல்பீர் சிங் ஆகிய இருவரும் இந்திய விளையாட்டின் சகாப்தங்கள். ஆக்கி போட்டியில் இருவரும் சமவிகிதத்தில் சாதனை படைத்துள்ளனர். தயான் சந்த் பெயரை தேசிய ஸ்டேடியத்துக்கு சூட்டியும், அவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடியும் அவருக்கு ஓரளவு மரியாதை கொடுத்து இருக்கிறோம். ஆனால் பல்பீர் சிங் ஒருபோதும் உரிய மரியாதையை பெறவில்லை. பத்மஸ்ரீ விருது மட்டும் பல்பீர் சிங்குக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. என்னை பொறுத்தமட்டில் தயான் சந்த், பல்பீர் சிங் ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். அதற்கு இருவரும் தகுதி படைத்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com