இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 11வது நாளான இன்று நடந்த பெண்கள் ஹாக்கி போட்டி காலிறுதியில் இந்தியா அணி தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

இந்திய அணி ஊனையும் உயிரையும் முன் நிறுத்தி டிஃபண்ட் செய்தது. சரித்திரத்தை அரங்கேற்றியிருக்கிறது. ஒட்டுமொத்த தேசத்தையும் ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்திருக்கிறார்கள் இந்திய ஹாக்கி வீராங்கனைகள். காலிறுதிக்கே போகாது என்று கருதப்பட்ட அணி, இன்று அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.

கோல்கீப்பர் சவிதா, டிபண்டர்கள் தீப் கிரேஸ், நிக்கி பிரதான், குர்ஜித்... ஒவ்வொருவரும் இந்தியாவின் ஸ்டார்களாகக் கொண்டாடப்படவேண்டும்!

இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. குர்ஜித் கவுர் கோல் அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவியுள்ளார்.பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்தார் குர்ஜித் கவுர்,இன்றைய பரபரப்பான காலிறுதி ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இந்தியாவின் வெற்றி கோலை அடித்தார், இதுவே அவரது முதல் ஒலிம்பிக் கோலாகவும் அமைந்தது. வரலாற்று வெற்றியில், மகளிர் ஹாக்கி அணியின் ஒலிம்பிக் மைல்கல் வெற்றியில் இதன் மூலம் குர்ஜித் கவுர் தடம்பதித்தார்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரை இறுதிக்கு முன்னேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள்.. நீங்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து ஒலிம்பிக்கின் தங்கத்தை வெல்ல வாழ்த்துக்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com