ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய முன்னாள் ஆக்கி வீரர் வெஸ் பெயஸ் மரணம்

image courtesy:PTI
இவர் இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயசின் தந்தை ஆவார்.
கொல்கத்தா,
பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டரின் தந்தையும், முன்னாள் ஆக்கி வீரருமான வெஸ் பெயஸ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. 1972-ம் ஆண்டு முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் வெஸ் பெயஸ் இடம் பெற்றிருந்தார். இவர் கடுமையான பார்கின்சன் நோயின் தாக்குதலுக்கு ஆளானதுடன் வயது மூப்பு பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார்.
வெஸ் பெயசின் மறைவுக்கு ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் திலிப் திர்கே, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






