இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் மரணம்

வயது மூப்பு காரணமாக இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் மரணம் அடைந்தார்.
இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் மரணம்
Published on

பெங்களூரு,

இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனான எல்வெரா பிரிட்டோ(வயது 81) வயது மூப்பு பிரச்சினை காரணமாக பெங்களூருவில் நேற்று காலை மரணம் அடைந்தார். 1965-ம் ஆண்டில் அர்ஜூனா விருது பெற்றவரான எல்வெரா பிரிட்டோ ஆஸ்திரேலியா, இலங்கை, ஜப்பான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணிக்காக விளையாடி இருக்கிறார்.

இவருடைய சகோதரிகளான ரிதா, மே ஆகியோரும் ஆக்கி வீராங்கனைகள் ஆவர். 1960-களில் கர்நாடக மாநில அணி 7 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றதில் எல்வெரா பிரிட்டோ முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்வெரா பிரிட்டோவின் மறைவுக்கு ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் ஞானேந்திரா நிங்கோம்பாம் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com