எப்.ஐ.எச்.புரோ லீக் ஆக்கி: ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அக்டோபர் 30 ஆம் தேதி ஸ்பெயின் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
Image Courtesy: PTI   
Image Courtesy: PTI   
Published on

புவனேஸ்வர்,

எப்.ஐ.எச். புரோ லீக் ஆக்கி 2022-2023ன் சீசன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. தொடக்க நாளில் நடைபெறும் போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து அக்டோபர் 30 ஆம் தேதி இந்திய அணி ஸ்பெயின் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

அதை தொடர்ந்து இந்திய அணி நவம்பர் 4 ஆம் தேதி மீண்டும் நியூசிலாந்து அணியையும், நவம்பர் 6 ஆம் தேதி ஸ்பெயினையும் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான 22 பேர் கொண்ட இந்திய அணியை, ஆக்கி இந்தியா இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும், மிட்பீல்டர் மன்பிரீத் சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் வீரர்கள் பெயர் பின்வருமாறு:

கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதக், ஸ்ரீஜேஷ்

டிபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்ப்ரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், மன்தீப் மோர், நிலம் சஞ்சீப் செஸ்

மிட்பீல்டர்கள்: சுமித், மன்பிரீத் சிங் (துணை கேப்டன்), ஹர்திக் சிங், மொய்ராங்தெம் ரபிச்சந்திர சிங், ஷம்ஷேர் சிங், நீலகண்ட சர்மா, ராஜ்குமார் பால், முகமது. ரஹீல் மௌசின்

முன்கள வீரர்கள்: எஸ். கார்த்தி, மன்தீப் சிங், அபிஷேக், தில்ப்ரீத் சிங், சுக்ஜீத் சிங்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com