இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளின் கேப்டன்கள் அறிவிப்பு

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். #Sreejesh #RaniRampal #HockeyIndia
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளின் கேப்டன்கள் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளின் கேப்டன்களாக ஸ்ரீஜேஷ் மற்றும் ராணி ராம்பால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காயம் காரணமாக சில மாதங்களாக கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் விளையாடாமல் இருந்தார். அவர் தலைமையில் இந்திய அணி கடந்த 2016-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வெள்ளி வென்றது. ரியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் கேப்டனாக தொடர்ந்தார். மேலும் ஜூனியர் அணியின் கோல்கீப்பர்களான விகாஸ் தாஹியா, கிருஷண் பதக் ஆகியோருக்கு சிறப்பான பயிற்சி அளித்ததால் கடந்த 2016-இல் ஜூனியர் உலகக் கோப்பையும் இந்தியா வசமானது.

கடந்த 2017-ம் ஆண்டு அஸ்லன்ஷா ஹாக்கிப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரீஜேஷ் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் ராணி ராம்பால் தலைமையிலான மகளிர் அணி ஆசியக்கோப்பையை வென்றது. 12-ம் இடத்தில் இருந்து தற்போது 10-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. 12 ஆண்டுகளில் முதன்முறையாக கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த செய்திக்குறிப்பில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளின் கேப்டன்களாக ஸ்ரீஜேஷ், ராணி ராம்பால் ஆகியோர் 2018-ம் ஆண்டு இறுதி வரை நியமிக்கப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியாவின் பொதுச் செயலாளர் முகமது முஷ்டாக் அகமது கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com