புரோ லீக் ஆக்கி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள முன்னணி 9 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.
மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்தை தோற்கடித்தது. அடுத்த சுற்றில் உலக சாம்பியன் பெல்ஜியத்துக்கு எதிராக ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் கண்டது.