

காகமிகஹரா,
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (சப்-ஜூனியர்) ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானில் உள்ள காகமிகஹரா நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 9 அணிகளும், பெண்கள் பிரிவில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளும் முறையே இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
2-வது நாளான நேற்று பெண்களுக்கான 'ஏ' பிரிவில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதியது. விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணியில் நூஷீன் (19-வது, 28-வது நிமிடம்) கோலடித்தார். மலேசியா தரப்பில் நூர் அஸ்லி (41-வது நிமிடம்) பதில் கோல் திருப்பினார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று தென்கொரியாவை சந்திக்கிறது.