

இந்த போட்டியில் இந்திய ஹாக்கி வீரர் சிங்லென்சனா சிங் 17வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து வெற்றியை துவக்கினார்.
அதன்பின்னர் ராமன்தீப் சிங் (44வது நிமிடம்) மற்றும் ஹர்மன்பிரீத் சிங் (45வது நிமிடம்) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர். பாகிஸ்தான் அணியில் அலி ஷான் (49வது நிமிடம்) ஒரு கோல் அடித்துள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இது அந்நாட்டிற்கு எதிரான 5வது தொடர் வெற்றியாகும். இந்த போட்டி முடிவில் இந்திய அணி ஏ பிரிவில் முதல் இடத்தில் உள்ளது.
போட்டியில் தோல்வி அடைந்த நிலையிலும் பாகிஸ்தான் ஏ பிரிவின் டாப் 4 அணிகளில் ஒன்றாக உள்ளது.