பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை - மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய ஆக்கி அணி

நடப்பு சாம்பியனான இந்திய அணி, மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது.
இந்திய அணி
Published on: 

போபால்,

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரின் அரையிறுதியில் மலேசியாவை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆதிக்கம்

9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது.

இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, அடுத்தடுத்து கோல்களை அடித்து மலேசியாவுக்கு நெருக்கடி கொடுத்தது. இந்திய அணிக்காக மும்தாஜ் கான் 10-வது நிமிடத்திலும், நவ்நீத் கவுர் 18-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். தொடர்ந்து தீபிகா 25 மற்றும் 30-வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார். சுனேலிதா டோப்போ 33-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார்.

வெற்றி

இதற்கிடையே மலேசிய அணியின் நூர் அசார் 27-வது நிமிடத்திலும், நூராமிரா சுல்கிப்லி 52-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் இந்தியாவின் இஷிகா கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி, மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது.

X