குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லை..இந்திய ஹாக்கி அணி கேப்டனின் உருக்கமான பதிவு

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது ஜனாதிபதி மாளிகையில் கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது
குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லை..இந்திய ஹாக்கி அணி கேப்டனின் உருக்கமான பதிவு
Published on

டெல்லி 

ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி வங்காளதேசத்தின் டாக்காவில் அடுத்த மாதம் தொடங்குகிறது.இதற்கு தயாராகும் இந்திய அணியினருக்கான பயிற்சி முகாம் ஒடிசாவின் புவனேஸ்வரில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.

இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெறாத வீரர்கள் ஏற்கனவே பயிற்சி முகாமிற்கு வந்து சேர்ந்த உள்ள நிலையில்  , வெண்கல பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்று இருந்த வீரர்கள் இன்னும் இரண்டு நாட்களில் அந்த முகாமிற்கு வந்து சேரவுள்ளனர் .

இதில் இந்திய அணியின் கேப்டன்  மன்பிரீத் சிங்கிற்கு  மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது ஜனாதிபதி மாளிகையில் கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது.

மன்பிரீத் சிங் - நாஜ்வா  ஜோடிக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. இந்த விருதை வாங்கிய பின் வீடு திரும்பிய அவர் இந்திய அணியினருக்கான பயிற்சி முகாமிற்கு கிளம்பும் முன் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் , எனது குழந்தை பிறந்த பிறகு முதல் தேசிய முகாம் , இவளை விட்டு பிரிய மனம் இல்லை என குறிப்பிட்டுள்ளார் . 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com