இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவு

இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் உடல்நல குறைவால் இன்று காலை காலமானார்.
இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவு
Published on

மொகாலி,

இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங். அவர் கடந்த 1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற பெருமைக்குரியவர்.

ஒலிம்பிக்கின் ஆடவர் ஆக்கி இறுதி போட்டியில் தனிநபராக அவர் கோல்கள் அடித்து பதிவு செய்த உலக சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

இந்நிலையில், உடல்நல குறைவால் பஞ்சாபின் மொகாலி நகரில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் கடந்த 8ந்தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார். இதனை அவரது பேரன் கபீர் உறுதி செய்துள்ளார். அவருக்கு வயது 96. சிங்கிற்கு சுஷ்பீர் என்ற மகளும், கன்வால்பீர், பரன்பீர் மற்றும் குர்பீர் என 3 மகன்களும் உள்ளனர்.

கடந்த 1957ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி அவர் கவுரவிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com