ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 8-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.
Image Courtesy: @TheHockeyIndia
Image Courtesy: @TheHockeyIndia
Published on: 

மஸ்கட்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை நேற்று சந்தித்தது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், ஜப்பான், பாகிஸ்தான், மலேசியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான்- ஜப்பான், இந்தியா- மலேசியா அணிகள் மோதுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com